சித்ரதுர்கா, நவ.2- கருநாடகா பள்ளியில் நடக்கும் நாடக நிகழ்ச்சிக்காக பகத் சிங்கின் தூக்குத் தண்டனையை தனது வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருநாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த எஸ்எல்வி பள்ளியில் சஞ்சய் கவுடா (வயது 12) என்ற மாணவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் வேடத்தில் நடிக்க சஞ்சய் கவுடா நியமிக்கப் பட்டார்.
அதையடுத்து அவர் தனது வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். பகத் சிங்கின் வசனங்களை பேசிக் கொண்டு, அவரை தூக்கிட்ட நிகழ்வை ஒத்திகை பார்த்த போது, தற்செயலாக தூக்கு கயிற்றில் சஞ்சய் கவுடா மாட்டிக் கொண்டார். அந்த நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை. சிறிது நேரம் கழித்து வந்த அவர்கள், மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச் சியடைந்தனர்.
உடனடியாக மகனை மீட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சஞ்சய் கவுடா இறந்துவிட்டதாக மருத் துவர்கள் கூறினர். இதுதொடர்பாக காவல் துறையிரன் விசாரணை நடத்தி வருகின்றனர். பகத் சிங் நாடக ஒத்திகையின் போது மாண வர் இறந்த நிகழ்வு கருநாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment