ஸ்குவாஷ் உலகக் கோப்பை- சென்னையில் நடத்த திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

ஸ்குவாஷ் உலகக் கோப்பை- சென்னையில் நடத்த திட்டம்

2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப் பட்ட ஸ்குவாஷ் உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்று உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் தெரிவித் துள்ளார்.

 மூன்று நாள் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு மாநாடு (World Squash Federation conference (WSF)மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ((Annual General Meeting (AGM))  சென்னையில் நடைபெற் றது. இதில், கலந்து கொண்டு பேசிய உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் 2023ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்கு வாஷ் உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்றும், 2025 உலகக் கோப்பையும் இங்கு நடத்தப்படலாம் என்றும் தெரிவித்தார். இது தொடர் பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 “புதிய உலகக் கோப்பையை சென்னைக்குக் கொண்டு வர எங்க ளுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு (WC) இருந்தது, 2011-க்குப் பிறகு அது நடக்கவில்லை. இது புதுப்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதை ஒரு கலப்பு அணி நிகழ்வாக (மிக்ஸ்டு டீம் ஈவன்டாக) மாற்ற வேண்டும். நாங்கள் அதற்கான தகுதி அளவுகோல்களை முடிவு செய்ய வில்லை. சென்னையில் 2024இல் உலக இரட்டையர் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். உலக ஸ்குவாஷ் சம்மேளனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான பிரதேசமாகவும் மதிப்புமிக்க கூட்டாளராகவும் உள் ளது, அவர்கள் எங்கள் அமைப்பை ஆதரிப்பதில் மற்றும் சில மறக்க முடியாத உலக நிகழ்வுகளை வழங்கு வதில் வலுவான சாதனையை கொண் டுள்ளனர். கோவிட் காரணமாக எங்கள் மாநாட்டில் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த மாநாடு மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் பொதுக் கூட்டம் ஆகியவை முக்கிய மானவை. அதோடு, அமைப்பின் குடும்பத்தை நேரில் மீண்டும் ஒன்றி ணைப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னையில் போட் டியை நடத்துவதற்காக தாராளமான ஆதரவையும், விருந்தோம்பலையும் தந்த ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெட ரேஷன் ஆஃப் இந்தியாவை (எஸ்.ஆர்.எஃப்.அய்.) நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெட ரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான தைத் தொடர்ந்து 2023இல் மீண்டும் தொடங்கப்பட்ட உலகக் கோப்பை சென்னையில் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஸ்குவாஷ் போட்டிகளில் தென் இந்திய மாநிலங்கள் உலக அளவில் புகழ்பெற்ற வீரர் வீராங்கனைகளைக் கொண்டுள்ளது,   செஸ் ஒலிம்பியாட் நடத்தி உலகை தன் பக்கம் இழுத்த தமிழ்நாடு இப்போது ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளையும் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment