திருட்டுக் கும்பலில் சிக்கிய ‘கடவுள்' நடராசன் மீட்டது காவல்துறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

திருட்டுக் கும்பலில் சிக்கிய ‘கடவுள்' நடராசன் மீட்டது காவல்துறை!

சென்னை, நவ 9- சிலை திருட்டுக் கும்பலிடம் இருந்து 3 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்கப்பட் டது. மாறு வேடத்தில் சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட் டனர். 

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி, தொன்மையான சிலை கள் என கூறி ஏமாற்றி சட்ட விரோதமாக வெளி நாடுகளுக்கு கடத்தி சில கும்பல் விற்பனை செய்து வருகிறது. 

இதுதொடர்பாக, சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி சரக கூடுதல் காவல்துறை கண்காணிப் பாளர் பாலமுருகன் மேற்பார்வையில், ஆய் வாளர் பிரேமா சாந்த குமாரி, துணை ஆய்வா ளர்கள் ராஜேஸ், பாண் டியராஜன், காவலர்கள் பரமசிவம், சிவபாலன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படையி னர் கோவை சென்று சம்பந் தப்பட்டவர்களி டம் சிலை வாங்குவது போல் பேசி, ஒரு குறிப் பிட்ட இடத்துக்கு நிலை யைக் கொண்டுவர கூறி னர். அதன்படி, கடந்த 6ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவையில் இருந்து பல்லடம் செல் லும் சாலையில் உள்ள இருகூரில் மாறுவேடத் தில் காத்திருந்தபோது, காரில் அந்த சிலையை கொண்டு வந்தனர். சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலையாக அது இருந்தது. அந்த சிலை குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பேசிய தால், காரில் வந்த 2 பேரையும் காவல்துறை யும் அதிரடியாக கைது செய்தனர். சிலையையும் பறிமுதல் செய்தனர். 

காவல்துறையில் சிக்கிய கார் ஓட்டுநர் ஜெயந்த் (வயது 22) மேட்டூர் வி.டி.சி. நகரை சேர்ந்தவர். மற்றொருவர் கேரள மாநிலம் பாலக் காடு கல்லடத்தூரை சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி (53) ஆவார். இருவரும் இந்த நடராஜர் சிலையை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழ்நாட்டில் எந்த ஊரில் உள்ள கோவி லில் இருந்து திருடப்பட் டது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

No comments:

Post a Comment