பட்டுக்கோட்டை, நவ.28 கடந்த 25.11.2022 அன்று பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை எதிரில் ஜாதி ஒழிப்புப் போராளி பட்டுக்கோட்டை ராமசாமி நினைவு மேடையில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் எழுச்சி யோடும் உணர்ச்சிமிக்க வகையிலும் நடைபெற்றது கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வீரவணக்க உரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் சில்லத்தூர் சிற் றரசு, மாவட்டத் தலைவர் அத்திவெட்டி வீரன், பெரியார் பெருந்தொண்டர் அரு, நல்லதம்பி, வழக்குரைஞர் அணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரத்தின சபாபதி, செயலாளர் காமராஜ், ஒன்றிய தலைவர் வீரமணி, அத்திவெட்டி வீரமணி, நகர செயலாளர் தென்னவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சமரன் நாராயணன், ராதா கிருஷ்ணன், பே.அண்ணாதுரை, சர வணன், ஜெகநாதன் ஆகியோர் பங் கேற்று சிறப்பித்தனர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பக்கிரி சாமி, ராஜசேகரன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் சக்கரவர்த்தி ஆகி யோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செய லாளர் காளிதாசன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் ரங்கசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment