நிர்ணயம்
பொது வருங்கால வைப்பு நிதியின் முதல் மற்றும் 2ஆம் காலாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதமான 7.1 சதவீதத்தையே 3ஆவது காலாண்டுக்கும் நிர்ணயித்து ஒன்றிய அரசு உத்தரவு.
வாக்காளர்
தமிழ்நாட்டில் 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
சமர்பிக்க...
சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும் என தீட்சிதர்களுக்கு அற நிலையத் துறை உத்தரவு.
மோனோ ரயில்
தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து இலகுரக மோனோ ரயில் என்ற வேளாண் பொருள்களை எடுத்து செல்லும் போகுவரத்து சாதனத்தை சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட வருவாய் அலு வலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 உதவி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
உறுதி
புதிதாக அமையவுள்ள விமான நிலையத் திட்டத் திற்காக பரந்தூர் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி.
தயார்
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 1,234 கமாண்டோ நீச்சல் வீரர்கள் தயாராக இருப்பதாக தீயணைப்புபுத் துறை இயக்குநர் பி.கே.ரவி தகவல்.
மின்சாரம்
தமிழ்நாடு மின்துறையின் முன் எச்சரிக்கை நடவடிக் கையால் கனமழையிலும் வீடுகள், கடைகள், தொழிற் சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்.
கட்டாயம்
பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமம் பெற சிறப்பு பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை களும் வெளியிடப்பட்டுள்ளன.
உத்தரவு
கோயில் குளங்கள் புறம் போக்கு என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
புதிய அலை
புதிய உருமாற்ற ‘எக்ஸ்பிபி' வைரசால், இந்தியாவில் மீண்டும் கரோனா அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஒப்புதல்
பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.51,875 கோடி மானியம் அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
No comments:
Post a Comment