குஜராத், நவ. 1- குஜராத்தில் மோர்பி தொங்குபாலம் விழுந்து 150 பேருக்கும் மேற்பட்டோர் மரணம் 400க்கும் மேற்பட்டோ ரைக் காணவில்லை. இது தொடர்பான செய்திகள் முதல் நாளோடு முடிந்து விட்டன. மோடி புகைப் படக்காரர்களை அழைத்து கொண்டு படேல்சிலை யின் பாதத்தில் பால் ஊற்றி மலர்க ளைத் தூவ கிளம்பிவிட்டார்,
பாலத்தின் சிதிலத்தில் சிக்கி தப்பிப் பிழைத்தவர் களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை என்றால் நாம் என்ன கேள்விப் பட்டிருப்போம்.
அங்கு மருந்து, மாத் திரைகள் இருக்கும், பழங் கள் இருக்கும், நோயாளி களுக்கான உணவுகள் இருக்கும், மாற்று உடுப்பு கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும், ஆனால் குஜராத் மருத்து வமனையில்?
பீடிக்கட்டு உள்ளது கூடவே தீப்பெட்டி, தம் பாக்கு எனப்படும் புகையிலை தூள் அடங்கிய சிறிய குப்பிகள் இருந்தன. இதை கூல் லிப் என்று கூறிப் போதைக் காரர்கள் வாங்குவார்கள். ஹான்ஸ் எனப்படும் குட்கா போதைப் பொருள் உள்ளது, அதன் மேல் போதைப்பாக்கு இருக்கிறது, குஜராத் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இது எல்லாம் கொடுக்கிறார் களா என்று தெரிய வில்லை.
அதுமட்டுமல்ல பீடி, தீப்பெட்டியை தவிர மற்ற பொருட்கள் எல் லாம் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா, ஜார் கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ் தான் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்ட பொருட் கள் ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங் களில் இந்தப்பொருட் களை விற்பவர்களுக்கு விநியோகிப்பவர்களுக்கு சிறைதண்டனை உண்டு. குறிப்பாக இந்தியா முழு வதும் உள்ள அனைத்து திரையரங்குகள், மருத் துவமனைகள் மற்றும் பொது இடங்களில் இந்தப்பொருட்களைப் பயன்படுத்தினால் புற்று நோய் மற்றும் காசநோய் ஏற்படும் என்று விளம் பரங்கள் வைக்கப்பட் டுள்ளன. ஆனால் குஜ ராத் ஒன்றிய அரசின் மருத்துவமனை உள் நோயாளிகள் வார்டி லேயே இந்தப்பொருட் கள் அனைத்தும் வெளிப் படையாகவே வைக்கப் பட்டுள்ளன.
இதுதான் 15 ஆண்டு கால மோடி ஆட்சியின் குஜராத் மாடலா?
No comments:
Post a Comment