சென்னை, நவ. 21 தமிழ் நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டி நேற்று (20.11.2022) மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க் யூட்டில் நடைபெற்றது.
டிசிஎல் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடை பெற்றது.
இதன் இறுதிப் போட்டி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிசி எல் இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப் பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு வாகை யர் பட்டக் கோப்பை யுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப் பட்டது. முதல் ரன்னர் அப் வென்ற ரேன்சை யெர்ஸ் அணிக்கு ரூபாய் 2 லட்சம் ரொக்கப்பரிசும், இரண்டாவது ரன்னர் அப் வென்ற மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ் அணிக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெய்ன்ட் இந்தியா நிறுவனத்தின் அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களை சிறப்பித்தார்.
No comments:
Post a Comment