புதுடில்லி, நவ. 7 நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி பலவீனப்படுத்துவதாக மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இமாசலபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்தார். சோலன் என்ற இடத் தில் அவர் பேசியபோது வாக் காளர்களிடம், " நீங்கள் தாமரையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நான் தாமரை யுடன் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் வாக்களிக்க செல்கிற போது, தாமரையை பாருங்கள். பா.ஜ.க.வும், மோடியும் உங்க ளிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தாமரைக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கான உங்கள் ஆசியாக அமையும்" என குறிப்பிட்டார்.
ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளரின் பெயரை வாக்கா ளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறி இருக்கிறார். மேலும், தாமரைக்கு வாக்கு அளியுங்கள். அது மோடிக் கான உங்கள் வாக்கு என்றும் சொல்லி உள்ளார். நாடாளுமன்ற விவாதங்களையும், பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளையும் தவிர்த்து விட்டு, பிரதமர் மோடி, இப்போது தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநா யகத்தின் அடிப்படையையே பலவீனப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் பக்தர் களும் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை நீண்டகாலமாகவே வளர்த்து வருவதை நாங்கள் அறிந்திருக் கிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சி முறை என்பது, பெரும் பான்மைவாதத்தை நிலைநிறுத் தும். ஆனால் நாட்டின் பன்முகத் தன்மையை சாகடித்து விடும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
No comments:
Post a Comment