டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு என்று கேள்வி கேட்ட நீதிபதி, 10 சதவீத உயர்ஜாதி ‘அரிய வகை ஏழைகளுக்கான’ இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என சொல்வது முரண் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
றீ பத்து சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு அளிக்க திமுக முடிவு. இது குறித்த விஷயங்களை விவாதிக்க அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பி னர்கள் கூட்டம் நவம்பர் 12இல் நடைபெறும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உயர்ஜாதி ‘அரிய வகை ஏழைகளுக்கான’ இட ஒதுக்கீடு சட்டம் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதற்காக நீண்ட சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம். இப்போது உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ணிகீஷி அரசியலமைப்புத் திருத்தம், இந்து உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பதை வெளிப்படையாக கூறுவதைத் தவிர்க்கும் நோக்கத் துடன் உள்ளது என்கிறார் சமூக ஆய்வாளர் சதீஷ் தேஷ்பாண்டே.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஹிந்து என்ற சொல் பாரசீக மொழியில் இழிவாக கூறப்பட்டுள்ளது என்று தான் சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற முடியாது. இது குறித்து விவாதம் செய்யவும் தயார், கர்நாடக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி திட்டவட்டம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கான சட்டத்திற்கு எதிராக மேலும் சட்டம் போராட்டம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
தி டெலிகிராப்:
* தேர்தல் பத்திரம் குறித்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், தவறானது, முறையற்றது. ஆளும் கட்சி தவறான நன்மையை பெற முயற்சி செய் கிறது என ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் ஈ.ஏ.எஸ்.சர்மா குற்றச்சாட்டு.
* தனியார் கல்வி நிறுவனங்களிலும் உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி.
* ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அதிகரித்திட, ஜாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் தேவை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment