காரைக்குடி, நவ. 4- தமிழ்நாடு அரசு மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞர், நிதி அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் 1991ஆம் ஆண்டு அப்போது பதவியிலிருந்த ஆளுநர் பீஷ்ம நாராயண சிங் அவர்களால் "பாவேந்தர் விருது" பெற்றவரும், 18 நூல்களுக்கு மேல் படைப்பாளியாக எழுதி பல்வேறு பரிசுகளை வாங்கியவரு மான காரைக்குடி மூத்த தமிழறிஞர் புலவர் ஆ.பழநியின் 3ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்வு குறள் அரங்கில் நடந்தது. "தமிழ்ச்சுரங்கம்" பேராசிரி யர் ஆறு.அழகப்பனார் தலைமை வகித்தார். அண்ணா தமிழ்க் கழக செயலாளர் அ.கதிர்வேல், "குறள் நெறிச் செம்மல்" சுப.பரமசிவம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் ஆர்வலர்கள் சாமி திரா விடமணி, ப.சுந்தரம், ந.செல்வராசன், இ.ப.பழனிவேலு, கொரட்டி பாலு, முடியரசன் குமணன், தி.என்னாரெசு பிராட்லா மற்றும் புலவர் ஆ.பழநி யின் குடும்பத்தினருடன் ஏராளமா னோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை "அனிச்சம் அறக்கட்டளை"யினர், காசிநாதன் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment