புதுடில்லி, நவ. 11- “கல்வி லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல!” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர பிரதே சத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு
ரூ. 24லட்சம் என அரசு நிர்ணயித்தது. 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று இதற்கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால், ஆந்திர அரசின் இந்த உத்தரவை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆந்திரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ துலியா அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. அப்போது, ரூ.24 லட்சம் என்ற புதிய கட்டணத் தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையை விட 7 மடங்கு அதிகம் என்றும் இது எந்த வகையிலும் நியாயமற்றது என கூறிய உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்துள்ளது. மேலும், கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல என்று கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய கட்டணமே நியா யமானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
No comments:
Post a Comment