ஒருவரது வாழ்வில் தந்தையாக, சகோதரனாக, கணவனாக என ஆண்கள் முக்கிய பங்கை வகிக் கிறார்கள். ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த வீட்டின் தலைவனான ஆணின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஆனால் தற்போது பெண்களை விட ஆண்கள் அதிகளவில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு அவர்கள் குடும்பம் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று அல்லும் பகலும் அயராது உழைப்பது ஓரு முக்கிய காரணம்.
ஆகவே ஆண்களை அதிகம் தாக்கும் நோய் களைப் பற்றியும், அவற்றைத் தவிர்க்கும் சில வழி களைப் பற்றியும் காண்போம்.
பெண்களை விட ஆண்கள் பல்வேறு இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் பக்கவாதம், மாரடைப்பு, ஒழுங் கற்ற இரத்த அழுத்தம் போன்ற பல உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இதயம் தொடர்பான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
சமூக அழுத்தங்கள், பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் காரணமாக ஆண்களின் மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. மேலும் பெண்களை விட ஆண்கள் மன இறுக்கம் மற்றும் பிற மனநல கோளாறுகளால் பாதிக்கப்படு வதாக பல ஆய்வுகளும் கூறுகின்றன.
ஆண்களிடம் இருக்கும் மிகவும் மோசமான பழக்கங்களுள் ஒன்றான புகைப்பிடிக்கும் பழக்கத் தால் பெரும்பாலான ஆண்கள் சுவாச நோய்களால் அவதிப்படுகிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே தான் அதிகம் உள்ளது. இப்பழக் கம் சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
சர்க்கரை நோய் அனைவருக்கும் வரக்கூடியது தான். இருப்பினும் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அது மனநல கோளாறுகள், இதய நோய்கள், பாலி யல் இயலாமை மற்றும் பலவற்றை ஏற்படுத்தும். எய்ட்ஸ் என்பது உயிரைப் பறிக்கும் மிகவும் கொடிய நோய். ஆய்வுகளின் படி, அஇதுவரை பதிவுசெய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளில் 70%-த்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்பது தெரி யுமா?
ஆண்கள் சரும புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடல் புற்று நோய், சிறுநீரக புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப் படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் தங்கள் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை இல்லாமை தான். அதோடு வாழ்க்கைத் முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவையும் ஒருவருக்கு வரக்கூடிய நோய்களுக்கு முக்கிய காரணம்.
எனவே நல்ல ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, தினசரி உடற்பயிற்சி யில் ஈடுபட வேண்டும் மற்றும் மன ஆரோக்கி யத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர சிகரெட், மது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மருத்து வரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment