புதுடில்லி நவ. 27- ராஷ்டிரீய ஜனதாதள கட்சி நிறுவனர் லாலுபிரசாத் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரு கிறார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல திட்ட மிட்டார்.
நீதிமன்றமும் அனுமதி அளித்தது. சிங்கப்பூர் மருத்துவ மனையில் டிசம்பர் 5ஆம் தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரகக் கொடை செய்கிறார். இதற்காக லாலுபிரசாத் சிங்கப்பூர் செல்கிறார்.
லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் செல்ல டில்லி தனி நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதி அளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் செல்கிறார்கள்.
No comments:
Post a Comment