சிதம்பரம் கோயில்: நந்தனார் சந்நிதி வாயில் கதவின் பூட்டு உடைப்பு - இளைஞர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

சிதம்பரம் கோயில்: நந்தனார் சந்நிதி வாயில் கதவின் பூட்டு உடைப்பு - இளைஞர் கைது!

கடலூர், நவ. 26- சிதம்பரம் நட ராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த வாயில் என கூறப் படும் கதவில் பூட்டை உடைத்த இளைஞரிடம் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என கூறப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். மேலும் அடைத்து வைத்துள்ள இந்த இடத்தில் மரத்திலான பெரிய கதவு ஒன்று அமைத்து உள்ளனர். 

நந்தனார் நுழைந்த வாயிலை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  கடந்த 23.11.2022 அன்றிரவு நட ராஜர் கோயிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் பூட்டப்பட்டிருந்த நந்தனார் வாயில் கதவு பூட்டை உடைத்துள்ளார். அதனை பார்த்த தீட்சிதர்கள் சிதம்பரம் காவல் நிலையத் திற்கு தகவல் அளித்தினர். அதன் பெயரில் காவல்துறையினர் கோயிலுக்கு சென்று அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில், அவர் சிதம்பரம் கனக சபை நகரை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் நந்தனார் மீது பற்றுக் கொண்டவர் என் றும், இந்த வாயிலை தீண் டாமை என பூட்டி உள்ளார் கள். இதனை உடைக்க வேண் டும் எனவும், நடராஜர் எல் லாரையும் காப்பாற்றுகிறார் என்று கூறும் அவர், இந்த கோயில் பூட்டை உடைத்தது தவறு என்றால் அவரே என்னை தண்டிக்கட்டும் என்றும், பொதுமக்கள் மத்தி யில் பேசி உள்ளதாக கூறப் படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் இதற்கு வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இரண்டாவது நாளாக நடைபெற்ற விசாரணையில் இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கதவுக்கு அருகே பொங்கல் வைத்து கற்பூர சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனி டையே, நவ.24 அன்று காலை சிதம்பரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண் டன் உள்ளிட்ட காவல்துறையினர் நடராஜர் கோயிலுக்கு சென்று பூட்டு உடைக்கப் பட்ட சுவர் பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.

No comments:

Post a Comment