கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வாதம்

சென்னை,நவ.8- ஒன்றிய அரசை விட மாநில அரசுகளே, கல்விக்காக அதிக அளவில் செலவு செய்கிறது என்று உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த 1975-_1977இல் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, மாநில பட்டி யலில் இருந்த கல்வியை பொதுப்பட் டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தின் 42ஆவது திருத்தம் கொண்டுவரப் பட்டது. இதை எதிர்த்து தற்போது, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலனின் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகா தேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நேற்று (7.11.2022) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எழிலன் சார்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ஒன்றிய அரசு, நெருக்கடி நிலை காலகட்டத்தில் கொண்டு வந்த இந்த அரசியல் சாசன திருத்தம், மாநில அரசின் தன்னாட்சி அந்தஸ்தை பறிக்கும் வகையில் உள்ளது. இது கூட்டாட்சி கொள்கையை பாதிக் கிறது. கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எந்த அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட வில்லை. வழக்கு தொடர்ந்த அறக்கட் டளை அரசியல் சார்பற்றது. வழக்கில் மேற்கோள்காட்டும் தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் 42ஆவது அரசியல் சாசன திருத்தம் விஷ மரம் போன்றது. அதை வேரோடு அகற்றவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட் டின் கூட்டாட்சி கொள்கை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகா ரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை பிறப்பித்துள்ளது. கூட் டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாக திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது.     

ஒன்றிய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும். கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக 20 மாநிலங்கள் கையெழுத் திட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் மேகாலயாவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால் அப்போது கையெழுத்திடவில்லை. எந்த காரணமும் இல்லாமல் நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1978ஆம் ஆண்டு ஆகஸ்டில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப் பட்டு மக்களவையில் நிறைவேற்றப் பட்ட போதும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை என்று வாதிட்டார். இந்த வழக்கின் வாதங்கள் முடிவடையாததால் விசாரணை நாளைக்கும் (இன்று) தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment