மயிலாடுதுறை நவ 21 மயிலாடு துறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விளைநிலங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் இரா.முத்தரசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மழையால் பாதிக்க ப்பட்ட பகுதிகளை தமிழ் நாடு முதலமைச்சர் கடந்த 14ஆம் தேதி நேரடியாக வந்து பார்வை யிட்டு சென்றுள்ளார்அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகளை மேற் கொண்டு வருகிறார். தொடர் மழையால் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 764 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். இதுவே மிகப் பெரிய பாதிப்புக்கு அடையாளம் இரண்டு லட்சம் மக்கள் கையேந்துகிற நிலைமை ஏற்பட்டு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அரசு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது. பல இடங்களில் ஆய்வு செய்தபோது விவசாயம் முற்றிலும் அழிந்து போய் உள்ளது தண்ணீர் வடிந்தாலும் அந்த பயிர்களை இனி காப்பாற்ற முடியாது, கால்நடைகள், வீடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். முதலமைச்சர் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கப் படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் அறிவித்த ரூபாய் ஆயிரம் போதாது _ கூடுதலாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு குறை ந்தபட்சம் ரூ.30000 வழங்க வேண்டும். பெற்ற குழந்தை தாயை பறிகொடுத்தது போல் சம்பா சாகுபடிவிவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிரை பறி கொடுத்து தவித்து வருகின்றனர். மீண்டும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மய்யம் அறிவித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு ஏற் படும் விவசாயிகள் ஒரு ஆண்டுக் கான வருமானத்தை முற்றிலும் இழுந்துவிட்டனர்.
மேலும் விவசாயிகளின் மாடி வீடுகள், தொகுப்பு வீடுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. தனையும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நாகை மக்களவை உறுப்பினர் செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், நிர் வாகிகள் சிவராமன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment