டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி ஆதரவு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு ஆளுநரை நீக்கிட தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரிடம் மனு.
* பணமதிப்பிழப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்காதது சங்கடத்தை தருகிறது என உச்சநீதி மன்றம் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்ச நீதிமன்றத்தின் உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்பு, எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு எதிராக சமூக அநீதியை களையும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களை தந்த பாதுகாப்பான பிரிவுகளை நிலை நிறுத்தத் தவறிவிட்டது என்கிறார் மூத்த வழக்கு ரைஞர் கே.எஸ்.சவுகான்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநர் ஒரு சூப்பர் ஆடிட்டர் அல்லது வல்லமை பொருந்தியவர் அல்ல, தெலங்கானா மாநில மேனாள் தணிக்கை அதிகாரி கருத்து.
* உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை தான் ஏற்கவில்லை என காங்கிரஸ் எம்.பி.-க்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி கருத்து.
தி இந்து:
* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான சமீபத்திய தீர்ப்பில், 2015 இன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் ஜன நாயகத்திற்கு இன்னும் தொலைநோக்குடையதாக இருந்தது, தற்போதைய விவாதத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சந்திர கிரகணத்தின் போது உணவு அருந்தும் விழாவை பகுத்தறிவாளர் கழகம் நடத்தியது. இதற்கு சங்கிகள் எதிர்ப்பு. காவல் துறை தடியடி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment