குஜராத் தேர்தலை மனதிற் கொண்டு திட்டமிடப்பட்ட ஒன்று!
குஜராத் மேனாள் முதலமைச்சர் வகேலா பகிரங்க குற்றச்சாட்டு
அகமதாபாத், நவ 26 கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது என்று மேனாள் காங் கிரஸ் முதலமைச்சர் வகேலா பகிரங்கமாக குற்றஞ்சாட்டிள்ளார்
கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்ட மன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஷங்கர்சிங் வகேலா பரபரப்பு குற்றச் சாட்டை சுமத்தி உள்ளார். இது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவகர்கள் வந்த இரு பெட்டிகளில் சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம்கள் என கூறப்பட்டது. இதனால், அங்கு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது. இதில் 20 பேர் ஆயுள் தண்டனையும், 11 பேர் மரண தண்டனையும் பெற்றனர். 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த விவகாரம் தற்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக..
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள மாநில மேனாள் முதலமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷங்கர்சிங் வகேலா, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களைக் கூறியுள்ளார். 2002 சட்டமன்றத் தேர் தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப் பட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் செயல்படுத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டி உள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில், ரயில் பெட்டி உள்ளே இருந்துதான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல எனக் கூறியதுடன், தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணித்த 59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்துக் கொல்லப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்ட மன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப் பட்டு செயல்படுத்தப்பட்டது. பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவ ரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப் பட்டது எனக் குற்றச் சாட்டினார்.
மார்பி பால விபத்து
இதனிடையே, 141 பேர் உயிரிழந்த மார்பி பால விபத்து (#MorbiBridgeCollapse) தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர் நீதி மன்றத் தின் தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் மேனாள் முதலமைச்சருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள் ளார். சங்கர்சிங் வகேலா குஜராத் மாநில மேனாள் முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் மேனாள் தலைவர் ஆவார். ஒன்றிய அரசில் மன்மோகன் சிங் ஆட்சி யில் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment