செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

செய்திச் சுருக்கம்

ரத்தாம்!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக் கும் சிறுபான்மையின மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படமாட்டாது என ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

வாக்காளர்

தமிழ்நாட்டில் கடந்த 9ஆம் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய 17 லட்சம் பேர் விண்ணப்பித் துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்.

மெட்ரோ ரயில்

பொதுமக்களின் வசதிக்காக, நெரிசல் மிகுந்த நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு.

குரங்கம்மை

குரங்கம்மை நோயை இனி ‘எம்பாக்ஸ்' என குறிப்பிட வேண்டுமென புதிய பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டியுள்ளது.

அனுமதி

நிதி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்ட 15 அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள அமலாக் கத்துறை ஒன்றிய அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏவுதளம்

ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் தனியார் புத்தாக்க நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய ஏவுதளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அகராதி

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையில் மருத்துவத்துறை சார்ந்த கலைச் சொற் களைத் தொகுத்து அகராதியாக வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை செய்ய அகர முதலித் திட்ட இயக்கம் தொடக்கம்.


No comments:

Post a Comment