தருமபுரி, நவ. 26- தருமபுரி மாவட்டம் மாரவாடி கிராமத்தில் தருமபுரி மாவட்ட கலைத்துறை அமைப்பா ளராக பணியாற்றி அன்பு கலைக் குழு என்ற பெயரில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கம்யூனிஸ்ட் முற்போக்கு சிந்தனை உள்ள பாடல்களை தமிழ்நாடு முழுவதும் பாடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மார வாடி கிராமத்தைச் சேர்ந்த
கா. இளங்கோவன் 23-.11.-2022 அன்று மறைவுற்றார்.
தருமபுரி மாவட்ட திராவிட கழகத்தின் சார்பாக 24.-11.-2022 பிற்பகல் 2.00 மணி அளவில் மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் தலைமையில் மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மண்டல தலைவர் விடுதலை அ.தமிழ்ச்செல்வன் முன் னிலையில் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் கதிர் செந்தில்குமார், விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், மாவட்ட திராவிட கழக இணைச் செயலா ளர் கு.சரவணன், நகர தலைவர் கரு.பாலன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்ல துரை மற்றும் ஊர் பொதுமக்கள் அனைத்து கட்சி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment