சென்னை, நவ 7- இலங்கை கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதன்கிழமை (9.11.2022) உருவாகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வரு கிறது. அதன் தொடர்ச்சி யாக குமரி கடல் பகுதி களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடும், புதுச்சேரியில் நாளை செவ்வாய்க்கிழமை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் தொடர்ச்சி யாக நாளை மறுநாள் (புதன்கிழமை) இலங்கை கடற்கரையை ஒட்டி யுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக்கிறது. இது அதற் கடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில் தமிழ் நாடும், புதுச்சேரி கடற் கரையை நோக்கி நகரக் கூடும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment