எச்சரிக்கை: சென்னையில் ‘மெட்ராஸ் அய்’ பரவுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

எச்சரிக்கை: சென்னையில் ‘மெட்ராஸ் அய்’ பரவுகிறது

சென்னை, நவ. 17- சென்னை யில் ‘மெட்ராஸ் அய்’ எனப்படும் கண் நோய் வேக மாக பரவி வருகிறது. சென்னைஎழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தின மும் சுமார் 5 பேர் ‘மெட் ராஸ் அய்’ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச் சைக்கு வந்த நிலையில், தற்போதுதினமும் சராசரியாக 50 பேர் வரு கின்றனர். இவை தவிர தனியார் மருத்துவமனை களில் 100-க்கும்அதிகமா னோர் நோயால் பாதிக் கப்பட்டு சிகிச்சைக்கு செல்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் கூறியதாவது: ‘ மெட்ராஸ் அய்’ தொற் றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத் திக் கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்ட வற்றை மற்றவர்கள் பயன் படுத்தக் கூடாது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது.

‘மெட்ராஸ் அய்’ 5 நாட்களில் குணமடையக் கூடியது என்றாலும், ஒரு சிலருக்கு பார்வையி ழப்பை ஏற்படுத்தலாம். அதனால் அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார். டாக்டர் அகர் வால்ஸ் கண் மருத்துவ மனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான ஆர்.கலா தேவி கூறிய தாவது:

சென்னையில் ‘மெட் ராஸ் அய்’ பாதிப்பு அதி கரித்து வருகிறது. குறிப் பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடி வுக்கு வரும்போது ‘மெட் ராஸ் அய்’ சற்றே மித மான அளவு அதிகரிக்கும். 

நோயாளிகள், தங்கள் கண்களிலிருந்து வரும் திரவத்தைதுடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற அடைபட்ட அமைவிடச் சூழல்களில் ‘மெட்ராஸ் அய்’ வேகமாக பரவக் கூடியது என்பதால், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட் டிலேயே தனித்திருப்பது நல்லது என்றார்.

No comments:

Post a Comment