தினமலர் ஒப்புதல்! ‘அதிகாரிகளுக்கு கைவந்த கலை!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

தினமலர் ஒப்புதல்! ‘அதிகாரிகளுக்கு கைவந்த கலை!'

‘அரசியல்வாதிகள் விடாக் கண்ட னாக இருந்தால், அதிகாரிகள் கொடாக் கண்டனாக இருப்பர் போலிருக்கிறதே...' என, உத்தரப்பிரதேச மாநில மக்கள் புலம்புகின்றனர்.

இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக் கிறது. இங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக் கற்ற நிலையில் உள்ளதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

முதல்வர் ஆதித்யநாத், இந்த விஷயத்தில் நேரடியாகவே தலையிட் டார். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் சாலைகளை சீரமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சியினர் மட்டும் இன்றி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் குண்டும், குழியுமான சாலைகளை புகைப்படம் எடுத்து, அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்; ஆனாலும், பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. பொதுப்பணித் துறை அமைச்சரான ஜிதின் பிரசாதாவை களத்தில் இறக்கி விட்டார், முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஏராளமான புகார்கள் வந்துள்ளதால், அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக முன் அறிவிப்பு இன்றி, அந்த சாலைகளை ஆய்வு செய் யப் போவதாக அறிவித்தார், அமைச்சர்.

இதையறிந்த அதிகாரிகள், அமைச் சர் திடீர் பயணம் மேற்கொள்வதற்கு முன், அவரது உதவியாளர்களை தொடர்பு கொண்டு, அவர் எங்கு செல் லப் போகிறார் என்ற தகவலை அறிந்து, முன் கூட்டியே, அந்த சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.

உ.பி., மக்களோ, 'அரசியல்வாதிகளை ஏமாற்றுவது அதிகாரிகளுக்கு கைவந்த கலை...' என, கிண்டலடிக்கின்றனர்.

‘தினமலர்', 9.11.2022, பக்கம் 8


No comments:

Post a Comment