பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அறிவியல் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அறிவியல் கண்காட்சி

தஞ்சை, நவ. 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத் தும் நோக்கில் அறிவியல் கண் காட்சி 2022 துவக்க விழா நிகழ்ச்சி 8.11.2022 அன்று இப் பல்கலைக்கழத்தின் உள் விளை யாட்டு அரங்கில் நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சி நவம்பர் 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கிலும் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை செயற்கூடங் களிலும் நடைபெற்றது. 

துவக்க விழா நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையில், பதிவாளர் பேராசிரியர் பி.கே. சிறீவித்யா முன்னிலையில் நடைபெற்றது. 

சிறப்புரை

இவ்விழாவில் பொறியியல் புல முதன்மையர் பேராசிரியர் சி.செந்தமிழ்குமார் வரவேற் புரையாற்றினார். இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் இயக்குநர் முனைவர் எம். லோகநாதன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் மாணவர்கள் பொருளாதார சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நான்காவது தொழில் புரட்சி காலக்கட்டத்தில் நம் நாட்டு மக்களுக்கு சிந்தனை வளம் அதிகம் உள்ளதால், நாம் அதனை பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் நாட்டு முன்னேற் றத்திற்கு பாடுபட வேண்டும் என்றார். கணிதமேதை இராம னுஜம், அப்துல்கலாம் போன்ற எண்ணற்ற அறிவியல் சிந்தனை யாளர்கள் வளர்ந்த இந்த நாட் டில் நல்ல தொழில் புரட்சியை ஏற்படுத்தவேண்டும். பழைய மரபுகளை உள்வாங்கிக் கொண்டு நவீன தொழில் புரட்சியை ஏற் படுத்துவதற்கு இந்த அறிவியல் கண்காட்சி மாணவர்களை வளப்படுத்தும் என்று நம்புகி றேன்.

வாழ்த்துரை

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய புதுச்சேரி அருணா கிளினிக் முதன்மை இயக்குநர் வீ.அழகரசன் இந்த கண்காட் சியை பாராட்டி மாணவர்க ளுக்கு பரிசு வழங்கு வதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களிடம் வழங் கினார். 

மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அப் துல் கலாமினுடைய அய்.எஸ். ஆர்.ஓ. ராக்கெட் லான்ச் பற் றிய அறிவியல் தொழில்நுட் பங்கள் பற்றி கூறினார். அப்துல் கலாம் அவர்களின் பாதையில் மாணவர்கள் எவ்வாறு நடப் பது மற்றும் படித்தவர்கள் வெளிநாட்டுக்கு போகமால் இந்தியாவிலே தொழில் முனை வராக தொழில் செய்யய வேண் டுமென்று கூறினார். மேலும் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி. வீரமணி அவர்களின் அறிவுரையின் பேரில் இந்த அறிவியல் கண்காட்சியை இப் பல்கலைக்கழத்தில் நடத்த ஏற் பாடு செய்யப்பட்டது என்று கூறினார். மேலும் வாகனத்தை ஓட்டும் போது தலைகவசம் அணிவது மிக முக்கியம், கைபேசி நேரத்தை குறைத்து அறிவியல் பூர்வமான எண் ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர் களை கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில் கல்வி புல முதன்மையர் பேராசியர் அ. ஜார்ஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் பேராசிரியர் வெ. சுகுமார், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர் ஆர். மல்லிகா, மற்றும் முதன்மையர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இக்கண்காட்சி யில் 1000க்கும் மேற்பட்ட மாண வர்களின் அறிவியல் படைப்பு கள் கண்காட் சியில் வைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பாகும் என்றார். 

இவ்விழாவின் இறுதி யில் கட்டிட எழிற்கலைத்துறை தலைவர் பேராசிரியர் என்.ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment