சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளநீர் பாதிப்பு ஏற்பட்டால், அதனை உடன டியாக அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்து வருகின்றனர். இதனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு செவ்வாய்கிழமை இரவு கொட்டும் மழையிலும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில், அமைச்சர் எவ.வேலு செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வெள்ளநீர் பாதிப்பு ஏற்பட்டால், அதனை உடன டியாக அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்து வருகின்றனர். இதனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை யால், வால்டாக்ஸ் சாலையில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குறுக்கு பாலத் தால் தான் அந்த பகுதியில் மழைநீர் தேங்கவில்லை.
மழையால் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, குண்டும், குழியுமாக இல்லாமல் சாலையாக செப்பணிடப்படும். மேலும், நெடுஞ்சாலை துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 குழு அமைக்கப்பட்டு மழைநீர் தேக்கம் அகற்றுவதற்கும், மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு என தயார் நிலையில் உள்ளன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இணையாக கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவ மனை விளங்குகிறது. இந்த மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், வடசென்னை, தென்சென்னை என்று பிரிவினை எல்லாம் இல்லை, அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். ஏன் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் இருப்பதே வடசென்னையில் தான். வடசென்னை மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment