ஜெயங்கொண்டம், நவ. 25- அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து (THROW BALL) போட்டி செந் துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 9.11.2022 அன்று நடைபெற்றது.
போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட ஆண்கள் பிரிவு களில் சுமார் 210 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் ஆண்கள் மூன்று பிரிவுகளிலும் கலந்து கொண்டனர் இதில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவுகளில் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் கள் ராஜேஷ் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் களை பள்ளி தாளா ளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனை வரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment