தலைமைச் செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக பிரெய்லி தகவல் பலகை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

தலைமைச் செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக பிரெய்லி தகவல் பலகை!

சென்னை, நவ.15 தலை மைச்செயலகத்தில் பார் வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக் கிய இடங்களில் பிரெய்லி முறையிலான தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள் ளது.

பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கை களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறு வனம். பார்வையற்றோரும் திருக்குறள் மற்றும்,  நன் னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, அய்ங் குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித் தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் நடவடிக் கையில் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில், சென் னையில் உள்ள தலைமைச் செயலகம் வரும் பார் வையற்றோர் மற்றும் அங்கு பணி புரியும் பார் வையற்றோர், எளிதில் அடையாளம் காணக் கூடிய வகையில் படிக் கட்டுகள் மற்றும் நுழைவாயில், கழிப்பறைப் பகுதிகளில் பிரெய்லி முறையில் தகவல் பலகை வைக்கப் பட்டு உள்ளது. இது அவர்களிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது.


No comments:

Post a Comment