மனு நீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி! விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களிடம் நூல் விநியோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

மனு நீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி! விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களிடம் நூல் விநியோகம்

சென்னை,நவ.7- பார்ப்பனர் அல்லாதாரை ‘சூத்திரர்கள்’ என் றும், பாவ யோனியில் பிறந்த வர்கள் பெண்கள் என் றும் குறிப்பிட்டு இழிவுபடுத் தும் மனுஸ்மிருதியை மக்களிடம் எடுத்துச்செல் லும் இயக்கத்தை விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் மக்களவை உறுப் பினர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் நேற்று (6.11.2022) சென்னையில் தொடங்கி வைத்தார்.

வருண பேதத்துடன் மக்களை இழிவுபடுத்து கின்ற மனுஸ்மி ருதியை தோலுரிக்கும் வகையில் மக்களிடம்  ஒரு லட்சம் புத்தகங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார் பில் வழங்கப்பட உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியா ளர்களிடம் நேற்று (6.11.2022) கூறுகையில், 

6.11.2022 காலை 10 மணி முதல் 1 மணி வரை மனுஸ்மிருதி புத்த கங்கள் மக்களுக்கு விலையின்றி வழங்கும் பணிகள் நடை பெறுகிறது. ஹிந்து சமூகத் தின் நலன்களுக்காக, பெண் களின் விழிப்புணர்வுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.   விழிப்புணர்வு நடவடிக்கை சமூக கட்ட மைப்பின் அடிப்படை கோட்பாடாக மனு ஸ்மிருதி இருக்கிறது. அதன் அடிப்படையில் ஹிந்து சமூகம் இயங்கி வருகிறது. இந்திய அரச மைப்பு சட்டம் வந்தாலும் கூட, சமூக மற்றும் பண்பாட்டு தளத்தில் மனுஸ்மிருதி ஆளுமை செலுத் துகிறது. குடும்ப நிகழ்வுகள் அனைத்து அதனடிப்படையில் மட் டுமே நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப் புணர்வை மக்களிடையே உருவாக்கும் வகை யில் விநியோகம் செய்கிறோம். 

அதற்கு முக்கிய கார ணம் ஆர்எஸ்எஸ் நட வடிக்கைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான். மனுஸ்மிருதியில் சொல்லப்பட்ட தையே, தனது அரசியல் கொள் கையாக எடுத்து ஆர் எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தான் பாஜக. 

பாஜக என்ற அரசியல் இயக்கம் இருக்கும் போது, தமிழ்நாட்டில் ஏன் ஆர் எஸ்எஸ் ஊர்வலம் நடத்த வேண்டும்? எதற்காக தனியே ஆர்எஸ்எஸ் ஊர் வலம் நடத்த வேண்டும்.   உயர்நீதிமன் றத்தில் நீதி பதிகள் எழுப்பிய கேள் விகளுக்கு, ஆர்எஸ்எஸ் பின்வாங்கி ஓட்டம் பிடித் துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை, ஆர்எஸ்எஸ் உறுப்பினர் அட்டை, அலுவலகம் இல்லை, அடையாளம் இல்லை, பயங்கரவாத அமைப்பாக நீதிமன்றமே மக்களுக்கு அம்பலப் படுத்திவிட்டது. அவர்களால் நீதிமன்றம் கூறிய எந்த ஆதாரங் களையும் கொடுக்க முடிய வில்லை என்று தெரிவித்தனர். சமூகநீதி மண் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்படிப்பட்டது என் பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வட இந்திய மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கொட்ட மடிப்பதை போல், தமிழ் நாட்டில் கொட்டமடிக்க விரும்புகிறார்கள். இது சமூக நீதிக்கான மண் என் பதை ஆர்எஸ்எஸ் புரிந்து கொள்ள வேண்டும்.   பாஜக அரசியல் ரீதியாக பேரணியை நடத்துவதை நாங்கள் இதுவரை எதிர்த்த தில்லை. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தத் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆர் எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என்ற அச்சத்தில் நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து புத்தகம் வெளியிடுவதால் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட் டால் ஆர்எஸ்எஸ்-க்கு இந்தியாவிலேயே இட மில்லை. அதுவொரு பயங் கரவாத அமைப்பு. படேல் தடை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment