தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ. 18- இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடு தலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடு விக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச் சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் 16.11.2022 அன்று இரவு தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீன வர்கள் இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்டுள்ளதா கவும், இந்த ஆண்டில் மட்டும் இது வரை 198 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி சிறையிலடிக்கப்படுவதும், படகு கள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்துவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியி ருக்கும் மீனவர்களின் வாழ்வா தாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றும் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தரப் பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீன வர்கள் சிறை பிடிக்கப்படும் நிகழ் வுகள்கள் தொடர்வதாகவும், தமிழ் நாடு மீனவர்களுக்கு சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப் பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

இந்திய மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமைகளை பாது காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப் புடன் செயல்பட்டு வருகிறது என் றும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந் தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது என்றும், இது தொடர்பாகத் தேவையான தூத ரக நிலை நடவடிக்கைகள் எடுக் கவும் தனது கடிதத்தில் முதல மைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன வர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடு விக்க உரிய நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக ளுக்கு உத்தரவிட வேண்டும் என் றும் முதலமைச்சர் தனது கடிதத் தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment