ஜெயங்காண்டம், நவ. 25- பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் 8.11.2022 அன்று முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 19.11.2022 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கி லும் நடைபெற்றது.
போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதிற் குட்பட்ட ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு மற்றும் பல்வேறு எடைப் பிரிவுகளில் கம்பு சண்டை நடைபெற்றது.
அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்குட்பட்ட பிரிவில் திருமுருகன் 30 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தையும், கிருபாகரன் ஒற்றைக்கம்பு போட்டியில் முதலிடத்தையும், ஹரிஷ் 35-40 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் ராஜேஷ் 35--40 கிலோ எடை பிரிவில் முதலிடத்தையும், முருகானந்தம் 45--50 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும், அட்சய கண்மணி 40 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தையும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இனியவன் ஒற்றைக்கம்பு போட்டியில் முதலிடத்தையும், பவித்ரா இரண்டாம் இடத்தையும், ராகவி 40--45 எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். முதலிடம் பிடித்த திருமுருகன், கிருபாகரன், ராஜேஷ் மற்றும் இனியவன் ஆகியோர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த சிலம்ப ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளியின் தாளாளர் முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனை வரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment