ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு

ஓசூர், நவ.1 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப் புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்கா முடி தலைமையில் நடைபெற்றது.

சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கையை விளக்கியும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளிவரகூடாது, சாப்பிட கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொறுப் பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண்மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக், மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment