வடகுத்து, நவ.29 ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் கழகம் சார்பில் 25.11.2022 அன்று மாலை 6 மணி அளவில் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி தலைமையில், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முனியம்மாள், தமிழ் ஏந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, ஒன்றிய தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் தொடக்க உரை யாற்றினார். கழகப் பேச்சாளர் புலவர் ராவணன் உரையாற் றிய பின்னர், கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.
மற்றும் இந்திரா நகர் கிளை தலைவர் தங்க பாஸ்கர், பகுத்தறிவாளர் கழகத் தலை வர் தமிழன்பன், ஒன்றிய கழக தலைவர் பாவேந்தர் விரும்பி, இந்திரஜித், ராஜேந்திரன், ரட்சகன், மறுவாய் சேகர், தின மோகன், வருவாய் திருநாவுக் கரசு, வடக்குத்து தர்மலிங்கம், வடக்குத்து திராவிடன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment