சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்

சென்னை, நவ. 29 சென்னை மாநகராட் சியின் காங்கிரஸ் கட்சித் தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

சென்னை பெரு நகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்  நலக் குறைவு காரணமாக காலமானார்.

இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது. இருந்த போதி லும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக இழுபறி நிலை நீடித்து வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்படுகிறார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவராக பி.கோவிந்தராஜன் நியமனம் செய்யப் படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment