"ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுகம் மாவட்டம் தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவு மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

"ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுகம் மாவட்டம் தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவு மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

மன்னார்குடி, நவ. 3- மன்னார் குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.10.22. வியா ழன் மாலை 5.00 மணி அளவில் பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து இயக் கத்தின் செயல்பாடு எப் படி இருக்க வேண்டும், ஆர்.எஸ்.எஸ்.செயல் பாடுகளைத் தீவிர பிரச் சாரம் மூலமே எதிர் கொள்ள முடியும், தொடர்ச்சியான தெரு முனைக் கூட்டம் நடத்தி கொள்கையைப் பரப் புங்கள் எனவும்,  கழக நூல்கள் ஒன்றை ஆய்வு செய்வது என்ற பொரு ளில் அரங்கக் கூட்டம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். 

டிசம்பர்.2  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 90ஆவது பிறந்த நாளில் சென்னையில் நடக்கும் சந்திப்பு நிகழ்ச் சியிலும், மாலையில் நடக்கும் அரங்கக் கூட்ட நிகழ்ச்சியிலும் அதிக மான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் பிறந்த நாள் அன்று விடுதலை சந்தா வசூலினை முடித்து மன் னார்குடி சட்டமன்ற தொகுதிக்குள் 10க்கும் குறைவற்ற ஆயுள் சந்தாக் களை வசூல் செய்து வழங்கிட வேண்டும் என்று உரையாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு  த.சண்முகம்  பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டச் செயலாளர் இரா.கோபால், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், நீடா. ஒன்றி யத் துணைத் தலைவர் பி.வீராச்சாமி, மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச் செல்வன், மன்னை ஒன் றிய துணைத் தலைவர் ந.இன்பக் கடல், மன்னை ஒன்றிய ப.க.தலைவர் கோவி.அழகிரி, நீடா ஒன்றியச் செயலாளர் சக்திவேல், கோட்டூர் ஒன்றியப் பொறுப்பாளர் கல்வியாளர் செல்லையா, மன்னார்குடி பகுத்தறி வாளர் கழகத்தின் பொறுப் பாளர் பேரா.காமராஜ், மன்னை கழக ஒன்றியச் செயலாளர் ஆசிரியர் செல்வராஜ், கழக நீடா. ஒன்றிய மு.செயலாளர் .தங்க . பிச்சைக் கண்ணு, ப.க பொறுப்பாளர் .ஆசிரியர் . அறிவானந்தம், கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளர் .குமார், ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் நா.இரவிச் சந்திரன், மாவட்ட இளை ஞரணி செயலாளர். இளங்கோவன்,ப.க. தோழர். மன்னை முரளி, எடமேலையூர் லெட்சும னன், கோட்டூர் ஒன்றியத் தலைவர் நாராயணசாமி, மேலத் திருப்பலாக்குடி கோவிந்தராஜ், கழகப் பேச்சாளர் வழக்குரை ஞர் . சு. சிங்காரவேலர். மாவட்டச் செயலாளர் கோ.கணேசன். மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு த.சண் முகம் முன்னிலையுரை யாற்றினார்.

வாஞ்சூர் இளங்கோ வன், இளைஞரணித் தோழர்.சந்திரபோஸ், மன்னை சிவா. வணங்கா முடி, நீடாமங்கலம் நகரத் தலைவர் இரா.அய்யப் பன், நீடா ஒன்றிய இளை ஞரணித் தலைவர். க.சேகர், கோவில் வெண்ணி த.சர வணன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் சா.அய்யப்பன், மன்னார் குடி அழகேசன் முதலிய தோழர்கள் பங்கேற்றனர்.

புதிய பொறுப்பாளர் கோட்டூர் ஒன்றி செயலா ளர் குமார் நன்றி கூறி னார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருமக் கோட்டை தி.கசுந்தரம் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை சுயமரியாதை நாள் விழாவாக மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார் பாக எழுச்சியுடன் கொண் டாடுவது எனவும் பிறந்த நாளினை சுவர் எழுத்து விளம்பரங்கள் மூலமாக பிரச்சாரம் செய்வது,

தீர்மானம்:3  தமிழர் தலைவர் ஆசிரியர் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் சென்னையில் நடைபெறும் சந்திப்பு நிகழ்விலும்  மாலையில் நடைபெறும் முதலமைச் சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கு பெறும் அரங்க க்கூட்டத்திலும் ஏராளமான கழகத் தோழர்கள் சென்று பங் கேற்பது,

8.10.2022 அன்று சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் தலைமையில் நடை பெற்ற தலைமை செயற் குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத் துவது,

தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ் நாட்டில் மதவெறியை தூண்டி அமளிக்காடாக்க துடிக்கும் ஆர்எஸ்எஸ் இன் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் எழுதியுள்ள ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன் குதிரை என்ற நூலினை விளக்கி மாவட்டம் தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர் கோட் டூர் ஒன்றியச் செயலாளர் பெருக வாழ்ந்தான் எம்.பி. குமார் அறிவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment