சென்னை, நவ 21- தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தர வுகளையும், தகவல்களை யும் தெரிவித்து வருகின் றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட் டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு 'தமிழ்நாடு நடுகல் மரபு' கண்காட்சி நடைபெற் றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித் தார். தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் முன்னிலை வகித்தார். ரோஜா முத் தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணே சன் வரவேற்றார். பாண் டியநாட்டு வரலாற்று ஆய்வு மய்யத் தொல்லிய லாளர் சாந்தலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.
இக்கண்காட்சியை தமிழ்நாடு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற் றும் தமிழ் பண்பாட்டுத் துறை மற்றும் தொல் பொருள் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது: “தமிழ்நாடு பண்பாட்டு கூறுகளில், பண்பாட்டு தொடர்ச்சிகளில் மனித இனம் இந்திய நிலப்பரப் பில் தோன்றியதில், ஏறத் தாழ 15 லட்சம் ஆண்டுக ளுக்கு முன்பாகவே தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மனித இனம் தோன்றியிருக்க கூடும் என்பதற்கு ஆய்வு ரீதியான முடிவுகள் நிறைய உண்டு. பொது வாக ஒரு இனம் தோன்றி அந்த இனம் தொடர்ச் சியாக நிலப்பரப்பில் வரு கிறபோது பண்பாட்டுத் தொடர்பில் முழுமை பெறாமல் ஆங்காங்கே இடைவெளிகள் ஏற்படக் கூடும். ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறும் பண்பாடும் உற்றுநோக் கினால் பழைய கற்காலம், நுண்கற்காலம் தொடங்கி இன்றுவரை ஒருமனித இனம் எல்லா வகையான நாகரிகத் துடன் தொடர்ச்சியான பண்பாட்டுகளில் நிலை பெற்றிருப்பது தமிழ்ச் சமூகம் மட்டுமே. தமிழ் நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய த கவல்களையும், தரவுக ளையும் தெரிவித்து வரு கிறது. இரும்பின் காலம் இந்தியாவின் எந்த பாகத்தை காட்டிலும் நம் முடைய தமிழ்நாட்டில் தான் முதலில் துவங்கியிருக்கிறது. 4000 ஆண்டு களுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை அறிந்த சமுதாயமாக தமிழ்ச்சமுதாயம் இருக் கிறது என்பதற்கு மயி லாடும்பாறையில் நமது தொல்லியல்துறை நிகழ்த் தியிருக்கும் ஆய்வுகள் திட்டவட்டமான முடிவு களை தந்திருக்கிறது.
வீரமரணம் நடுகல் மரபு
ஒருகாலத்தில் நடுகல் மரபு என்பது சங்க காலத்தில் கிடையாது என்ற கருதுகோள் இருந் தது. புலிமான்கொம்பை கல்வெட்டு கிடைத்த பிறகுதான் சங்ககாலத்தி லும் நடுகல் மரபு இருப்ப தாகவே சிலர் ஒத்துக் கொண்டனர். அரசர்க ளுக்காக உயிர்நீத்தவர்க ளுக்கு மட்டும் நடுகல் எழுப்பவில்லை. போரில் உயிர் நீத்து வீரமரணம் அடைந்தவர்களுக்கும் நடுகல் எழுப்பும் முறையை இந்த தமிழ்ச்சமுதாயம் பெற்றிருக்கிறது. விவசா யத்தின் துணைத்தொழி லாக இருக்கக்கூடிய கோழிக்கும், நன்றி மறவாத நாய்க்கும் நடுகல் எடுத்துக்கொண்டாடிய இனம் தமிழினம்.
வளர்ச்சி பெற்ற சமுதாயமாக..
நமது முன்னோர்கள் எழுத்து முறை, தொழில், கல்வி, வேளாண்மை, நகர நாகரிகத்தில் முழு வளர்ச்சி பெற்ற சமுதா யமாக இருந்திருக்கிறார் கள் என்ற உண்மையை இன்றைய இளைய சமு தாயத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும். நமது வரலாற்றை இளைய சமு தாயத்தினர் தெரிந்து கொள்ள தமிழ்நாடு முத லமைச்சர் தொல்லியல் துறை சார்பில் மேற் கொள்ளும் ஆய்வுகளுக்கு நடவடிக்கைகளுக்கு உறு துணையாக இருக்கிறார். அதனையொட்டி மதுரை திருமலை நாயக் கர் மகாலில் ரூ.13 கோடி மதிப்பில் பல்வேறு புன ரைமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன, என்றார்.இதில், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், யாக்கை மரபு அறக்கட்டளை குமர வேல் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment