இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம்: ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

இந்திய சட்ட ஆணைய தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமனம்: ஒன்றிய அரசு

புதுடில்லி. நவ 9-- இந்திய சட்ட ஆணைய தலைவ ராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத் தரவு பிறப்பித்து உள்ளது.  

இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற கருநாடக உயர்நீதிமன்றம் நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

இதுபற்றி ஒன்றிய சட்ட மற்றும் நீதி அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளி யிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவ ராக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியை நியம னம் செய்வதில் அகம் மகிழ்கிறோம். இதே போன்று, சட்ட ஆணை யத்தின் உறுப்பினர்களாக நீதிபதி கே.டி. சங்கரன், பேராசிரியர் ஆனந்த் பாலிவால், பேராசிரியர் டி.பி. வர்மா, பேராசிரியர் ராகா ஆர்யா மற்றும் எம். கருணாநிதி ஆகியோ ரும் நியமிக்கப்படுகின்ற னர் என தெரிவித்து உள்ளார். 

கருநாடக உயர்நீதி மன்றம் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி முதல் 2022ஆ-ம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி வரை ரிதுராஜ் அவஸ்தி பணி யாற்றி உள்ளார். 2009-2021 ஆண்டுகள் வரை அலகாபாத் உயர்நீதிமன் றம் நீதிபதியாகவும் அவர் பணியில் இருந்துள்ளார். 

இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவர் கடைசி யாக 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஓய்வு பெற்ற பின்னர் அந்த பதவிக்கான நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த சட்ட ஆணையம், சட்ட நிபுணர்களை கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில், செயல்படுகிறது. சட்டரீதியில் ஆய்வு செய்து, ஒன்றிய அரசுக்கு சட்ட சீர்திருத்தத்திற்கான ஆலோசனை வழங்கும் பணியை இந்திய சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment