சென்னை,நவ.18- திருவாரூர் மாவட்டம், விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து, 50 ஆண்டு களுக்கு முன் திருடப்பட்ட, இரண்டு பழங்கால உலோக சிலைகள், அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம், ஆலத்தூரில் விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவி லில், அதே மாவட்டத்தில் உள்ள, வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள் வைக்கப் பட்டு இருந்தன.
சோழர் காலத்தைச் சேர்ந்த இச்சிலைகளை சிலர் 50 ஆண்டு களுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, 2017இல் காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலை களைத் தேடி வந்தனர். பின், இந்த வழக்கு, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இப்பிரிவு காவல்துறையினர், தமிழ்நாடு கோவில்களில் இருந்து திருடு போன சிலைகள் குறித்த புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, ஆய்வு செய்து வருகின் றனர். அப்போது, விஸ்வநாத சுவாமி கோவிலில் சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுபற்றி விசாரணையில் ஈடு பட்டு வந்தனர். இந்த சிலை களின் படங்கள், புதுச்சேரியில் இருப்பது தெரிய வந்தது.
இதன் வாயிலாக, விஷ்ணு மற்றும் நடனமாடும் கிருஷ்ணர் சிலைகள், அமெரிக்காவில் உள்ள, அருங்காட்சியகம் ஒன் றில் இருப்பதை கண்டுபிடித் தனர். மேலும், அங்கு வசிக்கும் தன்னார்வலர் ஒருவர் வாயிலாக, சிலைகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி தலைமையிலான காவல்துறையினர், விஷ்ணு மற்றும் நடன மாடும் கிருஷ்ணர் சிலைகளை, தமிழ்நாடு கோவிலில் இருந்து தான் திருடி கடத்தப்பட்டது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருகின்றனர். இதன் வாயிலாக, சிலைகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
No comments:
Post a Comment