மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்களை சேர்த்து வழங்குவது; தமிழர் தலைவரின் 90 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பிரச்சாரக் கூட்டம்- கருத்தரங்கம் நடத்த முடிவு: திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல்
திருவண்ணாமலை, நவ.7 திருவண் ணாமலை மாவட்டம் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5. 11 .2022 அன்று மாலை 4 மணி முதல் 7 மணிவரை திருவண்ணாமலை தமிழ்நாடு ஓட்டலில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது.
மண்டல கழக தலைவர் குடி யாத்தம் சடகோபன், மண்டல செய லாளர் வேட்டவலம் பட்டாபிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் ஏழுமலை வரவேற்புரை ஆற்றினார்; மாவட்டச் செயலாளர் மூர்த்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
போளூர் பழனி, ஜானகிராமன், அண்ணாதாசன், பலராமன், பன் னீர்செல்வம், வேட்டவலம் ஏழு மலை, சுந்தரமூர்த்தி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வெங் கட்ராமன், மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் ராம்குமார், செங்கம் ராமன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித் தும், இரண்டாவது கட்டமாக ‘விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து வழங்குவதுபற்றியும், மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக அமைப்புகளை ஏற்படுத்துவதுபற்றியும் விளக்கிப் பேசினர்.
அனைவரின் கருத்தையொட்டி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் விளக்க உரை யாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தலைமைக் கழக அறிவிப்புக் கிணங்க மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள ‘விடுதலை' சந்தாக்களை சேர்த்து வழங்குவது என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் 90 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றியும், கழக அமைப்புகளை ஒன்றிய வாரியாக அமைத்திடுவது, பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்ச்சியை சிறப்புற நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment