புதுடில்லி,நவ.7- முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி, அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை மதச் சிறு பான்மையோரின் எதிர்ப்புகளுக் கிடையே நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கை யிலும் பாஜக இதை குறிப்பிட்டு வருகிறது. அரசியல் ஆதாயத் துக்காகவே பொது சிவில் சட்டம் பற்றி பேசுவதாக பாஜக மீது புகார்கள் உள்ளன. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன்னோட்டமாக பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் கட்டமாக படிப்படியாக அமல்படுத்தவும், அதன்பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்தவும் ஒன்றிய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் களுக்கு சற்று முன்பு உத்தரா கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. உத்தராகண்டில் ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தர பிரதேசத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தனிச் சட் டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துகளை தெரி விக்க நாடாளுமன்ற மாநிலங் களவை சட்டத் துறை நிலைக் குழுவிடம் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.
பாஜக தரப்பினர் கூறுகையில், ‘‘மூன்று முக்கிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்த போது, விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அவற்றை திரும்பப் பெற வேண்டி வந்தது. இந்த நிலை, பொது சிவில் சட்டத்தில் வராமலிருக்க, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அமல்படுத்திய பின்னர் தேசிய அளவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்போம். இதனால், தனிச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப் படும் முஸ்லிம் பெண்கள் வாக்குகள் எங்களுக்கு கிடைக் கும்’’ என்கின்றனர்.
No comments:
Post a Comment