கந்தர்வக்கோட்டை நவ. 21 கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு கந்தர்வகோட்டை, அக்கச்சிப் பட்டி காட்டுநாவல், வீரடிப் பட்டி அண்டனூர், கெண்டை யம் பட்டி, மெய்குடி பட்டி, மங் கனூர், மட்டங்கால் ஆகிய நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்க டேஸ்வரி, நரசிம்மன், மருத்துவர் சுவாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். தொல் லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ஊராட்சி மன்றத் தலைவர் கங்காதரன் பார்வையிட்டனர். தேர்வு மய்ய ஒருங்கிணைப்பாளராக அறிவியல் இயக்க வட்டாரத் தலை வர் அ.ரகமதுல்லா, செயலாளர் ம.சின்னராஜா ஆகியோர் செயல் பட்டனர்.
அறிவியல் ஒளி மாத இத ழால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வில் மொத்தம் 100 வினாக் கள் இடம் பெற்றிருக்கும்.ஆறாம் வகுப்பு, மாணவர்கள் கட்டாயமாக 60 வினாக்களுக் கும், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாக 80 வினாக்களுக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாக 100 வினாக்களுக் கும் விடை அளிக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் எதிர்கால போட்டி தேர்வை எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் என்,எம்,எம்,எஸ், என்.டி.எஸ், ஊரக வருவாய் ஆகிய தேர்வு எழுதுவதற்கு மிக வும் முன்னோட்டமான தேர் வாக கருதப்படுகிறது.
வினாத்தாள்கள் அறிவியல் அடிப்படை திறனை சோதிக்கும் விதமாகவும், அறிவியல் பொது அறிவு வினாக்களும், கணினி வினாக்களும் இடம்பெற்று இருந்தன. இத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு மிகவும் சிந்திக்கும் திறனை கொண்டதா கவும், எதிர்காலத்தில் எங்களுக்கு போட்டி தேர்வு எழுதுவதற்கு மிகுந்த பயனளிப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர் இத்தேர்வில் அணு அமைப்பை கண்டறிந்தவர் யார்? இந்தியாவின் முதல் விண் கலம் செலுத்தப்பட்ட இடம் எது?. தமிழ்நாட்டின் காற்றாலை மூலம் அதிக மின்சாரம் கிடைக் கும் இடம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வினை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண் டன் பார்வையிட்டார்.
தேர்விற்கான ஆலோசனை களை தலைமை ஆசிரியர்கள் தமிழ்செல்வி, ஜெயந்தி சண் முகம், ராசாத்தி, காவேரியம் மாள், வேதநாயகி, ராகினி, விஜய லெட் சுமி,செல்வராணி,சீதா ஆகி யோர் வழங்கினர்.
தேர்வு அறை கண்காணிப் பாளராக மணிமேகலை, ஆனந்த ராஜ், அருள்மொழி, சுப்புலட் சுமி, பழனிச்சாமி, பாக்யராஜ், புவனேஸ்வரி, கண்ணன், மதி, நிவின், வெள்ளைச்சாமி, ஆகி யோர் செயல்பட்டனர்.
No comments:
Post a Comment