தமிழை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம் அமைச்சர் எ.வ.வேலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

தமிழை காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம் அமைச்சர் எ.வ.வேலு

சேலம் நவ. 6- தமிழ் மொழியை காக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஹிந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்  சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலா ளர்  ராஜேந்திரன் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாள ராக பொதுப்பணி மற் றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:- ஹிந்தி மொழி திணிப்பதை தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருக்கிறோம். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரி வித்து கடந்த 1952ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் மீது மறைந்த மேனாள் முத லமைச்சர் கலைஞர் திருச் சியில் தார் பூசிய வரலாறு உண்டு. தமிழ் மொழிக் காக 10 சட்டமன்ற உறுப் பினர்கள் பதவியை துறந் ததும் தி.மு.க.வின் வர லாறு. ஹிந்தி மொழி 500 ஆண்டுகாலம் தான் ஆகிறது. 

4 ஆயிரம் ஆண்டு தமிழ் மொழியை அழிக்க நினைப்பது எந்த விதத் தில் நியாயம். 4 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க ஏன்? மறுக் கிறார்கள். எங்கள் மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தமிழுக்கு இணையான மொழி ஹிந்தி அல்ல. இந்தியா வுக்கு வழிகாட்டி தமிழ் மொழி தான். தமிழ்நாட் டில் உள்ள 8 கோடி மக் களின் உருவம் தான் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே தமிழ் மொழியை காக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரணாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment