கங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி: முதலமைச்சர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

கங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி: முதலமைச்சர் ஆய்வு

அரியலூர், நவ. 29-- கங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அரியலூர் மாவட் டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகு தியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் 2 கட்டமாக அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்தது. 

இந்த நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடை பெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.11.2022) இரவு 8 மணியளவில் மாளிகை மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற பகுதியை ஆய்வு செய்ய வந்தார். அப்போது, மாளிகை மேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழைமையான பொருட்கள் மற் றும் அகழாய்வு மேற்கொண்ட பகு திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலு வலர்களிடம் கேட்டறிந்தார். 

மேலும் மாளிகைமேட்டில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவ ரையும் பார்வையிட்டார். அப் போது அகழாய்வின்போது எடுக் கப்பட்ட பொருட்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாங்கி பார்த்தார்.

காட்சிப்படுத்தப்பட்ட பழங் கால பொருட்கள் அகழாய்வுப் பணியின்போது கண்டெடுக்கப் பட்ட பழங்கால தங்கக்காப்பு, மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை முதலமைச்சரின் பார் வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சோழர்களின் கலையை பின்பற்றிய யானை தந்தத்தாலான மனித உருவம், சீன மண் பாண்டங்கள், செப்பு நாண யங்கள், செம்புப் பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகிய வையும் காட்சிபடுத்தப்பட்டிருந் தன. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, 

எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சி.வி.கணேசன், எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment