ஊரக திறன் பயிற்சித் திட்டம் கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

ஊரக திறன் பயிற்சித் திட்டம் கிராமப்புற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ. 26- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கம், ஒன்றிய மாநில அரசின் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில், “தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம்” என்ற திட்ட மாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.  

இத்திட்டத்தின் மூலம், கிரா மப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப் பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. இத்துடன், “ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான DDU GKY திட்டம்” செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த DDUGKY  திட்டத்தின் கீழ், 18 முதல் 32 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும். சென்னை நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை, ஆட்டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டு மானத்துறை, அழகுக்கலை, தக வல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு - 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து பயிற்சி வழங் கப்படுகிறது.

குறைந்தது 3 முதல் 6 மாதங் கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகர ணங்கள், கணினி பயிற்சி மற்றும் பயிற்சிக்குப்பின் திறன் பயிற்சி குழுமம் (Sector Skill Council) மூலம் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் ஆகிய வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் தனியார் நிறு வனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பமுள்ள இளைஞர்க ளுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இனங்களில் அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப் படுகிறது. இப்பயிற்சியை அளிப் பதற்கு தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 130 பயிற்சி நிறுவனங் கள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகின்றன. நடப்பாண்டில் மொத்தம் 28,840 இளைஞர்களுக்கு பயிற்சி யளிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளை ஞர்கள், ஒவ்வொரு மாவட்டத்தி லும் உள்ள ”மகளிர் திட்டம்” என்று அழைக்கப்படும் தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத் திலும் செயல்பட்டு வரும் வட் டார இயக்க மேலாண்மை அலு வலகத்தையோ அணுகி விவரங் களை பெற்று பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம்.

மேலும், ஒவ்வொரு வட்டா ரத்திலும் நடைபெறும் இளை ஞர் திறன் திருவிழாவில் (Youth Skill Festival)  பங்கேற்றும் விருப் பமான பயிற்சியை தேர்வுசெய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட் டுள்ள வாழ்வாதார உதவி அழைப்பு எண் (155330) எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் விவரங் களை கேட்டறியலாம்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த இருபால் இளைஞர்கள் தங்களின் கல்வித்தகுதிக்கேற்ப விருப்பமான, தொழில்பிரிவை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment