புதிய கல்லூரிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் அமைச்சர் முனைவர் க. பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

புதிய கல்லூரிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் அமைச்சர் முனைவர் க. பொன்முடி

சென்னை,நவ.29- தமிழ்நாட் டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரிகள், ஆய்வகங் கள், கூட்டரங்குகளின் கட்ட டப்பணி தொடர்பாக அனைத்து பொறியாளர்கள், உயர் கல்வித்துறை அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமை செயலகத் தில் உயர்கல்வித்துறை அமைச்சர்  முனைவர் க.பொன்முடி தலைமையில் நேற்று (28.11.2022) நடந்தது. அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது.

உயர்கல்வித் துறையில் 382 கட்டடப் பணிகளுக்காக ரூ.422.8 கோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். அனைத்து பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணித் துக் கொண்டிருக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடிசெலவில் அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான விடுதி கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார்.

அதற்கான திட்டம் வரை யறை செய்யப்பட்டு, நிதித் துறை அனுமதி பெற்று இன் னும் 20 நாட்களில் அவை களுக்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ராணி மேரி கல்லூரியில் ஆய்வுப் படிப்புகளுக்கான விடுதியும் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 20 அரசு கலை கல்லூரிகளும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப் பட்டு பணிகள் தொடங்காமல் இருக்கும் 6 கல்லூரிகளும் சேர்த்து 26 கல்லூரிகளுக்கான கட்டடப்பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார். தற் போது, 16 கல்லூரிகளுக்கான கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன.

இன்னும் 10 கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் மூலமாக வும், பொறியாளர்கள் மூல மாகவும் இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வரு கிறது. அடுத்த 2023-_2024ஆம் கல்வி ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய கல்லூரிகள் திறக்கப்படும். 

-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment