ஆளுநர் ரவி ஓர் அரசியல் கட்சிப் பிரதிநிதிபோல் செயல்படுகிறார்! : கே.எஸ்.அழகிரி பேட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

ஆளுநர் ரவி ஓர் அரசியல் கட்சிப் பிரதிநிதிபோல் செயல்படுகிறார்! : கே.எஸ்.அழகிரி பேட்டி!

 தருமபுரி, நவ.2- தருமபுரியில் காங் கிரஸ் கட்சியின் செயல்வீரர் களுக்கான ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதிபோல் செயல்படு கிறார். எடப்பாடி எப்படி மோடி முன் கைகட்டி, வாய்பொத்தி நின் றாரோ, அப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆட்சியின்மீது போர்தொடுக் கிறார். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்­ணாமலை, ஒரு அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் என்­பதை மறந்து பேசு கிறார், சிறிய சிறிய விளம்பரங்களுக்கு ஆசைப்பட்டு பேசுகிறார், கடலூ ருக்கு வந்திருந்தபோது அமைச்சரை தரக்குறைவாக பேசியிருக்கிறார். இது எல்லாம் அழகல்ல, பொது வெளியில் பத்திரிகையாளர்களை அநாகரீகமாக பேசிவருகிறார். அவர் என்ன மனநிலையில் இருக் கிறார் என்று தெரியவில்லை, காங் கிரஸ் கட்சி எப்போதும் இது போன்று நடந்து கொண்­டது இல்லை. கோவை சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை வெகுசிறப் பாக செயல்­பட்டு வருகிறது. 

இதில் அரசியல் செய்யவே, காவல்துறைமீது தொடர்ந்து அவதூறாக அண்­ணாமலை பேசி வருகிறார்.

 காவல் துறையின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஹிந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஹிந்தி மொழி ஒழிக என்றும் சொல்லவில்லை, திணிக் காதே , கட்டாயப்படுத்தாதே என்று சொல்கிறோம், இதையே தான் தி.மு.க.வும் சொல்கிறது. அண்ணாமலை குறித்து கூறும் போது, பொறுப்­பற்ற முறையில் எதை வேண்டுமானாலும் குறை சொல்லலாம், எதற்கும் ஆதாரம் வேண்டும், குற்றம் சொல்வதற் காகவே வெறும் அரசியல் பேசுவதை மக்கள் ஒரு போதும் ஏற்­பதில்லை, குற்றம் நடக்கும் போது கூறுங்கள் மக்கள் அதை பரிசீலிப்பார்கள், காவல்துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சட்­டம் ஒழுங்கு பிரச்சினையை மிக அழகாக கையாண்டிருக்கிறார்கள், புகை யிலை, குட்கா போன்றவைகளை தடுப்­பதில் திறமையாக பணியாற்றியிருக்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment