இரண்டாம் கட்ட விடுதலை ‘சந்தா’ சேர்ப்பை தீவிரமாக்க சிதம்பரம் மாவட்டக் கழகம் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

இரண்டாம் கட்ட விடுதலை ‘சந்தா’ சேர்ப்பை தீவிரமாக்க சிதம்பரம் மாவட்டக் கழகம் முடிவு

சிதம்பரம், நவ.2 சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் 26.10.2022 புதன் காலை 11.00 மணியளவில் புவனகிரியில் - கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் மாவட்ட இணைச்செயலாளர் யாழ். திலீபன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாவட்ட ப.க. தலைவர் கோ. நெடுமாறன், புவனகிரி ஒன்றியத் தலைவர் ஏ.பி. இராமதாசு, ஆண்டிப்பாளையம் ப. முருகன், திருமுட்டம் ஒன்றியத் தலைவர் பெரியண்ணசாமி, காட்டு மன்னை ஆனந்தபாரதி மாவட்ட இளை ஞரணி தலைவர் அ. சுரேஷ், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் செயபால், காட்டு மன்னார்குடி நகர தலைவர் பொன். பஞ்சநாதன், ஆண்டிப்பாளையம் பஞ்சநாதன், காட்டுமன்னார்குடி மா. பன்னீர் செல்வம், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு. தென் னவன், பி. ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்:

1. இரண்டாம் கட்ட விடுதலை ‘சந்தா சேர்ப்பை தீவிரமாக செய்து முடித்து _ நம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்வது எனத் தீர்மானக்கப்பட்டது.

2. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆணடு பிறந்த தின விழாவை, ஆண்டிப்பாளையம், பாளையங்கோட்டை, சோழத்தரம், கீரப்பாளையம், புவனகிரி, சிதம்பரம், அண்ணாமலைநகர், மஞ்சக்குழி, பி.முட்லூர், காட்டுமன்னார்குடி பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடு வதென தீர்மானிக்கப்பட்டது. மற்றும் தோழர் கள் விரும்பும் இடங்களில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் நியமனம்

மாவட்ட இளைஞரணி:

தலைவர்: காட்டுமன்னார்குடி அ. ஆனந்த பாரதி

செயலாளர்: குமாரகுடி சிற்பி சிலம்பரசன்

அமைப்பாளர்: கீரப்பாளையம் அ. சுரேஷ்

காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழகம்

தலைவர்: அறந்தாங்கி இரா. செல்வ கணபதி

செயலாளர்: ஆண்டிபாளையம் ப. முருகன்

அமைப்பாளர்: கீழக்கடம்பூர் சண்முக சுந்தரம்

திருமுட்டம் ஒன்றியம்

தலைவர்: பாளையங்கோட்டை 

கு. பெரியண்ணசாமி

செயலாளர்: கொழை இரா. இராசசேகரன்

அமைப்பாளர்: திருமுட்டம் இராசு

பரங்கிப்பேட்டை ஒன்றியம்

தலைவர்: கு. தென்னவன் மஞ்சக்குழி

செயலாளர்: துரை. ஜெயபால் மஞ்சக்குழி

பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி

தலைவர்: பி. ஸ்டாலின் மஞ்சக்குழி

ஆண்டிப்பாளையம் கிளை

தலைவர்: மு. குணசேகரன்

செயலாளர்: மா. பஞ்சநாதன்

No comments:

Post a Comment