வணக்கம். தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். தங்களால் தமிழர்களின் வாழ்வு மேம்படவும், வளம் பெறவும் வேண்டும். புரியாதவர்களுக்கு புரியும் வண்ணம், அறியாதவர்களுக்கு கடந்த கால நிகழ்வுகள் அறியும் வண்ணம், ஆளுநர் (கவர்னர்) அவர்களுக்கு தாங்கள் எழுதிய அறிக்கை அமைந்திருந்தது. அவர் படிக்கிறாரோ இல்லையோ, தமிழ்நாடு.... இந்தியா... ஏன்... அகில உலகத்தில் வாழும் தமிழர்களுக்கும் புரியாததை புரிய வைக்கும் வண்ணம் அந்த அறிக்கையை அறிவித்துள்ளீர்கள்.
திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட பகுதியில் சேர்தலா என்ற இடத்தில் வாழ்ந்த நாஞ்செலி என்பவர் "தோள் சேலை வரிக்காக (முலைவரி)" வரி வசூலிப்பவரிடம் தன் முலையையே அறுத்து, இலையில் வைத்து, எடுத்துச் செல் என்று சொல்லிவிட்டு உயிர் விட்ட வீரப் பெண்மணி, அவர் வாழ்ந்த பகுதி "முலைச்சி புரம்" என்ற பெயரோடு உள்ளது என்றும், அங்கு அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் கூறியது, அனைவரின் இதயத்திலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
இது போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை! தொடரட்டும் தங்கள் பணி!
வெல்லட்டும் திராவிட மாடல்! தமிழ் வாழ்க!!
"அறியாததை அறிய வைக்கும் அற்புதமான அறிக்கை''
- த.வானவில்
மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment