உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அரிய கருத்து சட்டம், நீதித் துறையில் பெண்கள் அதிகரிக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அரிய கருத்து சட்டம், நீதித் துறையில் பெண்கள் அதிகரிக்கப்பட வேண்டும்

புதுடில்லி,நவ.28- சட்டம், நீதித் துறையில் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலி யுறுத்தி உள்ளார்.

கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப் பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் 26.11.2022 அன்று நடைபெற்ற நிகழ்ச் சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகள்: காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றதும் இந்திய அரசியல் சாசன வரைவு உருவாக்கமும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகள். நீண்டகால சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்ததால் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, சுதந்திரம் பெற்ற இந்தியா சுயாட்சி செய்யத் தொடங்கியது.

வரலாற்றை மாற்ற வேண்டும்: நாட்டின் வர லாற்றை மாற்றி எழுத வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். எனவே, இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ள சில காலனித்துவ ஆட்சிக் கால நடை முறைகளை நீக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்புமக்களுக்கும் நீதி மற்றும் சுதந் திரத்தை உறுதி செய்ய முடியும்.

மேலும் சட்டம் மற்றும் நீதித் துறையில் பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீதித் துறையில் பணிபுரியும் பலதரப்பட்ட மக்களின் அனுப வத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுடைய அறிவு நீதித் துறையை மேலும் வலுவடையச் செய்யும். இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.


கருந்துளை ஒலி அலையை -  

ஒளியாக மாற்றிய நாசா 

வாசிங்டன், நவ.28 கருந்துளை பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலாளர்களுக்கு இன்று வரை மர்மமாக இருக்கும் கருந்துளை (Black Hole) பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப் போது புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. நமது பால்வெளி மண்டலத்தில் நிறைய கருந் துளைகள் உள்ளன. பால்வெளி மண்டலத்தில் உள்ள 'பிளாக் ஹோல்' எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் கடந்த மே மாதம் முதல் முறையாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து அபரிவிதமான ஆற்றல் வெளிவரும். குறிப்பாக கருந் துளையின் ஈர்ப்பு விசை மிக மிகத் தீவிரமானது. இந்த கருந்துளைகளில் இருந்து ஒளி உட்பட எதுவும் வெளியேற முடியாது. இந்த கருந்துளை குறித்து உலகெங்கும் ஆய்வுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய முயற்சியாக நாசா, கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலி களை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றியுள்ளது. உண்மையில் கருந் துளையால் வெளியிடப்பட்ட அலைகளை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே, புதிய சோனிபிகேஷன் முறை களைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலை களிலிருந்து ஒலிகளை உருவாக்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. இதற்காக நாசா அதன் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தால் பதிவு செய்யப்பட்ட வானியல் தரவு களைப் பயன்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள அந்த காட்சிப் பதிவினை கருந்துளையில் இருந்து வெளிப் படும் சத்தத்தை கேட்கமுடிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


No comments:

Post a Comment