நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரண மான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்.
புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப்பழக்கம் அத்தியா வசியமாகும். ஆன்டிஆக்சிடெண்டு நிறைந்த உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரோட்டீன் ஆகியவை நம் உடலுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றது. பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உடலில் சிறப்பான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்க வேண் டும். எனவே புரதம், வைட்டமின் பி12, போலேட் ஆகிய சத்துகள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் 10 உணவு வகைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மீன்கள் - ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப் பிட்டால் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்சிடெண்டுகள் கிடைக் கும். உடலில் ஏற்பட்ட நோய் தொற் றினால் அதிக பாதிப்பு ஏற்படால் தடுப் பதற்கு நமக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அவசியம் தேவை. இது பேசாளை, அயிலா அல்லது காணாங் கெழுத்தி ஆகிய மீன்களில் நிறையவே உள்ளது. இந்த மீன்கள் விலையும் குறைவு என்பதால் வாரத்துக்கு 3 முறையாவது வாங்கிச் சாப்பிடுவது நல்லது. விலைமீன் எனப்படும் சால் மன் மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. ஆனால் இந்த மீன் விலை மிகவும் அதிகம்.
இனிப்புத் தயிர் - உடலுக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள் ளது. ஜீரண மண்டலத்தில் குடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இனிப்புத் தயிர் தடுக்கின்றது. கேன்சர் மற்றும் தொற்று நோய்களை தவிர்க்கும் ஆற்றல் இனிப்புத் தயிருக்கு உள்ளது. இனிப்புத் தயிரில் வெள்ளை அணுக் களை உற்பத்தி செய்வதற்கு உதவியாக விளங்கும் குறிப்பிட்ட புரதச் சத்து நிறைந்துள்ளது.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக் கும் முக்கியமான ஆன்டி ஆக்சிடெண் டுகள் பீட்டா கேரோட்டின் சத்தில் நிறைந்துள்ளது. பிரகாசமான மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள், குடை மிளகாய் போன்ற காய்கறிகள், பச்சைக் கீரை வகைகள் ஆகியவற்றில் பீட்டா கேரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
காளான் - குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய சளி கட்டுதல், ப்ளூ காய்ச்சல்கள் போன்ற தொற்றுகளை எளிதில் தவிர்க்கும் ஆற்றல் காளான்களுக்கு உள்ளது. ஆய்ஸ்டர் காளான், பட்டன் காளான், பிரவுன் காளான் எனப் பல வகையான காளான்கள் உள்ளன. இவற்றை மிளகு, வெங்காயத்துடன் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் நல்லது.
வெள்ளைப்பூண்டு - பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தன்மை நிறைந்துள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும் திறன் உள்ளது.
நாட்டுக்கோழி இறைச்சியில் நமது உடலில் வெள்ளை அணுக்கள் மற்றும் டி செல்களை அதிகரிக்கும் புரதம் அடங்கியுள்ளது. அத்துடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் ஜிங்க் தாதுப்பொருளும் நாட்டுக் கோழி இறைச்சியில் உள்ளது
பூசணி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பசலைக் கீரை ஆகியவற்றில் வைட்ட மின் ஏ அதிகம் உள்ளது. ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிவிப்பழம், ஆரஞ்சு ஆகியவற் றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
No comments:
Post a Comment