பதில் சொல்!
திராவிட இயக்கத்தினர்மீது குறிப்பாக தி.மு.க.வின்மீது - அதன் தலைவர்கள்மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு!
‘‘மதச்சார்பற்ற நாடு என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக கவர்னர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்து மதங்களுக்கும், நடுநிலையானவராகவே ஆட்சியாளர்கள் இருக்கவேண்டும்; ஆனால், அனைத்திற்கும் எதிராக பேசுகிறார் கவர்னர்.
- தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை (‘தினமலர்', 1.11.2022, பக்கம் 8).
டவுட் தனபாலு: மற்ற மதங்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிற முதல்வர், ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாம நடுநிலை தவறுகிறாரே, அதற்கு அவருக்கு உரிமை உண்டென்றால், கவர்னருக்கு ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்க உரிமை உண்டு என்பதில் ‘டவுட்டே' இல்லை.
(‘தினமலர்', 1.11.2022, பக்கம் 8).
முதலமைச்சராக இருப்பவருக்கென்று ஒரு கட்சி உண்டு; கட்சிக்கென்று கொள்கை உண்டு. ஆனால், கவர்னர் என்பவருக்கு என்று ஒரு கட்சி உண்டா?
இரண்டாவது - ஹிந்து என்ற மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா, இல்லையா?
மூன்றாவது ஹிந்து என்று சொல்லும்போது வருண தர்மத்தை ஏற்கவேண்டும்.
முல்லாவால் எழுதப்பட்ட ‘இந்து' சட்டம் என்ற நூலில் ‘ஜாதி இல்லை என்று சொல்கிறவன் இந்துவாக இருக்க முடியாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாதி என்று வரும்போது பார்ப்பனரல்லாதார் அனைவரும் சூத்திரர் ஆவார்கள். சூத்திரன் ஏழு வகைப்படுவான்.
யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் என்று ஆரம்பித்து ஏழு அம்சங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று ‘தேவடியாள் மகன்'.
(மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415, 417) இதனை ஏற்றுக்கொண்டு, ஹிந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டுமா?
‘அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று கூறும் ‘தினமலர்' கூட்டமே பதில் சொல்லு!
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கு மோட்சம் கொடுத்த கடவுளை வழிபடும் (மாபாதகம் தீர்த்தபடலம் - திருவிளையாடல் புராணம்) கூட்டமே கூறு பதிலை!
- மயிலாடன்
No comments:
Post a Comment